

பாக்தாத்
ஐ நாவின் சிறார்களுக்கான அமைப்பான யூனிசெப் மோசுல் நகரில் குழந்தைகள் தீவிரவாதிகளால் மனிதக் கேடயமாக பயன்படுத்தக்கூடிய சாத்தியமிருப்பதாக கூறியுள்ளது. பலர் கடும் சண்டைக்கு இடையில் சிக்கவும், சில நேரங்களில் போரிடவும் கூட நேரிடலாம என்றும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது. போரில் மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்படுவதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது.
கடந்த அக்டோபரில் மோசுல் நகரின் மேற்குப் பகுதியில் தாக்குதலை துவங்கியது. அமெரிக்காவின் தொடர்ச்சியாக விமான மற்றும் தரைப்பட தாக்குதல் ஈராக்கிய படைகளுக்கு உதவின. போருக்கு முன்னதான மக்கள்தொகையான 7,00,000 பேரில் மூன்றில் ஒரு பகுதியினர் நகரை விட்டு வெளியேறி நண்பர்களுடனும், உறவினர்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். பலர் அகதிகளாக மாறியுள்ளனர்.
போர் நடக்கும் பகுதியில் ஏராளமானோர் இறந்து கிடப்பதாகவும், அதில் குழந்தைகளும் அடங்குவர் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.