பிரான்சில் அதிசயம்; கொரோனாவில் இருந்து மீண்ட 106 வயது பாட்டி

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து 106 வயது பாட்டி மீண்டுள்ளார்.
பிரான்சில் அதிசயம்; கொரோனாவில் இருந்து மீண்ட 106 வயது பாட்டி
Published on

பாரீஸ்,

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தீவிரமாக ஆட்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் நாடு திகழ்கிறது. அங்கு 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கியது. 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அங்கு ஓய்வு பெற்றவர்களுக்கான இல்லத்தில் வசித்து வந்தவர், ஹெலன் லெபவ்ரே. இந்தப் பாட்டிக்கு வயது 106. இவரையும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கியது. கடந்த 15-ந்தேதி மருத்துவ பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அவர் தங்கி இருந்த இடத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது அவர் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து முழுமையாக மீண்டு குணம் அடைந்து விட்டார்.

பிரான்சில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து குணம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சதம் அடித்த பாட்டி கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பது அங்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com