ஜிபூட்டி: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 109 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிபூட்டி.
ஜிபூட்டி: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 109 பேர் பலி
Published on: 

ஜிபூட்டி சிட்டி,

ஜிபூட்டி நாட்டில் இருந்து ஏமனுக்கு சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 109 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிபூட்டி. இந்நாட்டில் இருந்தும் பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் வளைகுடா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக செல்கின்றனர். இந்த கடல் வழி பயணத்தின்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

படகு விபத்து - 109 பேர் பலி

இந்நிலையில், ஜிபூட்டியில் இருந்து வெள்ளிக்கிழமை 305 அகதிகள் அரபிக்கடலில் ஏடன் வளைகுடா வழியாக ஏமனுக்கு படகில் சென்றுள்ளனர். நடுக்கடலில் சென்றபோது படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அறிந்த ஜிபூட்டி கடற்படையினர் விரைந்து சென்று 80க்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 109 பேர் உயிரிழந்தனர். மேலும், 116 பேர் கடலில் மாயமாகினர். இதையடுத்து மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com