சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள்

சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள் இருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள்
Published on

பீஜிங்,

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஹுய்சோ மாவட்டத்தில் வசித்து வருபவர் எல்வி (வயது 24). இவர் திடீரென்று காது வலியின் காரணமாக தூக்கத்தில் இருந்து எழுந்தார்.

காதுக்குள் ஏதோ ஊர்ந்து செல்வது போல் இருப்பதாகவும், கடுமையான அரிப்பை உணர்வதாகவும் வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வலது புற காதுக்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும் அதனுடைய 10 குட்டிகளும் ஓடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து, நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு அவரது காதில் இருந்து 11 கரப்பான் பூச்சிகளையும் மருத்துவர்கள் அகற்றினர். எல்வியின் காதுக்குள் கரப்பான் பூச்சிகள் எப்படி சென்றன என்பது தெரியவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com