துபாயில் பேருந்து விபத்து; 12 இந்தியர்கள் பலி

துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 12 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.
துபாயில் பேருந்து விபத்து; 12 இந்தியர்கள் பலி
Published on

ஓமன் நாட்டில் இருந்து துபாய் நோக்கி பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஈத் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய 31 பேருடன் பேருந்து பயணம் செய்து கொண்டிருந்தது. இந்த நிலையில், மெட்ரோ நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் ஒன்றை கடந்து சென்ற பேருந்து திடீரென விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி துபாயில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில், பேருந்து விபத்தில் 10 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். எனினும், இந்த எண்ணிக்கை உயர கூடும் என கூறி இருந்தது

ஏனெனில் சிலரது உடல்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்தில் காயமடைந்த 4 இந்தியர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் ரஷீத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.

இவர்களில் 8 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களில் 4 பேர் திருவனந்தபுரம் நகரை சேர்ந்த தீபக் குமார், ஜமாலுதீன் அராக்கவீட்டில், வாசுதேவ் மற்றும் ராஜகோபாலன் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதேபோன்று அடையாளம் காணப்பட்ட மற்ற 4 பேர் பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பெரோஸ் கான் பதான், கிரண் ஜானி மற்றும் திலக்ராம் ஜவஹர் தாக்குர் ஆவர்.

தற்போது காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com