100 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நிலத்தகராறு; இரு பிரிவினர் இடையே நடத்த மோதலில் 12 பேர் பலி

100 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலத்தகராறில் இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
100 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நிலத்தகராறு; இரு பிரிவினர் இடையே நடத்த மோதலில் 12 பேர் பலி
Published on

கவுதமாலா சிட்டி,

மத்திய அமெரிக்காவில் கவுத்தமாலா நாடு உள்ளது. அந்நாட்டின் நாலுலம் மற்றும் சண்டா ஹடரினா ஐஸ்டஹூஹன் பகுதிகளில் வசித்து வரும் இரு தரப்பினர் இடையே கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நிலப்பிரச்சினை இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக நேற்று நாலுலம் பகுதியில் உள்ள சின்கியூக்ஸ் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு மோதலில் பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்பினர் இடையேயான இந்த மோதல் அருகில் உள்ள பிற கிராமங்களுக்கும் பரவி வருவதால் வன்முறையாக மாறலாம் என அச்சம் நிலவி வருகிறது. இதனால், நாலுலம் மற்றும் சண்டா ஹடரினா ஐஸ்டஹூஹன் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com