தமிழக மீனவர்கள் 12 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்..!

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் 12 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்..!
Published on

கொழும்பு,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 12 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மயிலட்டி கடற்கரை முகாமுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது புதுக்கோட்டை மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com