இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது.
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தை சேர்ந்த 22 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், மீனவர்கள் 22 பேரில், மகாராஜா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் உள்ள 12 மீனவர்களை மட்டும் இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களும் நாளை மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com