சீனா: பள்ளி விடுதியில் தீ விபத்து... 13 மாணவர்கள் பலி

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சீனா: பள்ளி விடுதியில் தீ விபத்து... 13 மாணவர்கள் பலி
Published on

பீஜிங்,

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் யான்ஷான்பு கிராமத்தில் யிங்காய் பள்ளி உள்ளது. அந்த பள்ளி விடுதியில் நேற்று இரவு திடீரென்று தீப்பற்றியது. இந்த விபத்து குறித்து பள்ளி அதிகாரிகள் போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் வெகு நேரம் முயற்சித்து தீயை அணைத்தனர். இந்த கோர தீ விபத்தில் விடுதியில் இருந்த 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com