குகையில் இருந்து 13 பேர் மீட்பு உலக தலைவர்கள் வாழ்த்து

குகையில் இருந்து 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை வெற்றிகரமாக மீட்கப்பட்டதற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். #ThaiCaveRescue #Thamluangcave #Thailandcave
குகையில் இருந்து 13 பேர் மீட்பு உலக தலைவர்கள் வாழ்த்து
Published on

குகையில் இருந்து 13 பேர் மீட்கப்பட்டதற்கு,அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அழகான தருணம் எனவும், மீட்பு குழுவின் மிகப்பெரிய வேலை இது என்றும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்வை உலகம் பார்த்துக் கொண்டிருந்தது,சம்பந்தப்பட்ட அனைவரின் துணிச்சலுக்கும் வணக்கம் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசாமே குறிப்பிட்டுள்ளார்.

இது மறக்கமுடியாத சம்பவம் எனவும், மனித ஆற்றலின் சக்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com