

பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் உருவாகி தொடர்ந்து வலுத்து வருகிறது. இந்த மோதலின் ஒரு பகுதியாக கைபர் பக்துன்க்வா மாகாணம் வழியாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலீபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றது தெரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிக்சூடு நடந்தது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பாகிஸ்தானின் மொஹமண்ட் மற்றும் வடக்கு வசீரிஸ்தான் ஆகிய மாவட்டங்களில் இந்த பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்த சம்பவத்தில் தலீபான் அமைப்பைச் சேர்ந்த 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.