ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் - 15 பேர் காயம்

கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டோக்கியோ,
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் மிஷிமா நகரம் உள்ளது. இந்நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 38 வயதான ஊழியர் இன்று மாலை தொழிற்சாலையில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






