கேமரூன் நாட்டில் பஸ்-லாரி மோதலில் 16 பேர் சாவு

கேமரூன் நாட்டில் பஸ்-லாரி மோதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேமரூன் நாட்டில் பஸ்-லாரி மோதலில் 16 பேர் சாவு
Published on

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் டூவாலா- ஈடியா நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். லிட்டோரல் பகுதி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. இதனால் எதிரே வந்த லாரி மீது பஸ் நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com