

காபூல்,
ஆப்கானிஸ்தானில் பாத்கிஸ் மாகாணம், அப் காமரி மாவட்டத்தில் போலீசாருக்கு பாதுகாப்பு பணியில் உதவுவதற்காக உள்ளூர் போராளிகள் குழுவினர் நேற்று அதிகாலையில் வந்தனர்.
அவர்கள் மீது தலீபான்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 16 போராளிகள் பலியாகினர்.
இதற்கு இடையே காந்தஹார் மாகாணத்தில், ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் தலீபான்கள் தாக்குதல் நடத்தி அங்கு இருந்து 13 ஊழியர்கள், 20 பாதுகாப்பு ஊழியர்களை கடத்திச் சென்று விட்டனர்.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஸ்பின் போல்டாக் என்ற இடத்தில் தலீபான்களுக்கும், எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினர் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தலீபான்கள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது அந்த நாட்டு அரசுக்கு தலைவலியாக அமைந்து உள்ளது.