ராணுவம், பயங்கரவாதிகள் இடையே மோதல் - 113 பேர் பலி

ராணுவம், பயங்கரவாதிகள் இடையே நடந்த மோதலில் 113 பேர் உயிரிழந்தனர்.
ராணுவம், பயங்கரவாதிகள் இடையே மோதல் - 113 பேர் பலி
Published on

நிஜாமேனா:

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சாட் நாட்டின் லேக் சாட் பகுதியில் ராணுவ சோதனைச்சாவடி மீது போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ராணுவமும் பதிலடி கொடுத்தது.

இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 17 ராணுவ வீரர்கள், 96 பயங்கரவாதிகள் என மொத்தம் 113 பேர் உயிரிழந்தனர்.   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com