

பெய்ஜிங்,
சீனாவிலுள்ள ஹுனான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- "சீனாவின் ஹூனான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பயணிகளுடன் வந்த பேருந்து மீது லாரி மோதியது. இதில் 18 பேர் பலியாகினர்.
இரு வாகனங்கள் பெரும் சேதத்துக்குள்ளாகின. இதில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று கூறியுள்ளனர்.