உலகைச்சுற்றி...

ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் லேக் சாத் பகுதியில் 18 அப்பாவி மக்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டனர்.
உலகைச்சுற்றி...
Published on

* பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) வேட்பாளர் ஹனிப் அப்பாசிக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அவர் ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டார்.

*தென் ஆப்பிரிக்காவில் காவ்டெங் மாகாணத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் வாடகைக்கார் டிரைவர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

* ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் லேக் சாத் பகுதியில் 18 அப்பாவி மக்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர செயலை போகோஹரம் பயங்கரவாதிகள்தான் செய்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

* இந்தோனேசியாவில் 15 வயது சிறுமியை அவரது மூத்த சகோதரர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதில் கர்ப்பமுற்ற அந்த சிறுமி கருக்கலைப்பு செய்தார். இது தொடர்பான வழக்கின் விசாரணை அங்குள்ள கோர்ட்டில் நடைபெற்றது. இதில் சிறுமியை பலாத்காரம் செய்த சகோதரருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சட்டவிரோதமாக கருச்சிதைவு செய்து கொண்ட குற்றத்துக்காக அந்த சிறுமிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com