

காத்மாண்டு,
நேபாள நாட்டின் பொகாராவில் இருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கி ஒரு பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது.
தாடிங் மாவட்டம் கஜுரி அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட் டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, அருகில் உள்ள திரிசூலி ஆற் றுக்குள் பஸ் விழுந்தது.
தகவல் அறிந்தவுடன், நேபாள ராணுவம், ஆயுத போலீஸ் படை, நேபாள போலீசார் ஆகியோர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட னர்,
இந்த பஸ் விபத்தில் 19 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 25 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த 19 பேரில் ஒன்பது பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 24 வயது இங்கிலாந்து நாட்டவர் ஒருவரும், சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த நபர்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
காயம் அடைந்தவர்களில் ஜப்பான், நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு பெண் பயணியும் அடங்குவர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும், அதிக வேகம்தான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.