ஈரானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 19 பேர் பலி

ஈரானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 19 பேர் பலி
Published on

டெஹ்ரான்,

ஈரான் நாட்டின் மஜாந்தரன் மாகாணத்தில் பேருந்து ஒன்றில் 50-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென பிரேக்கில் ஏற்பட்ட கோளாறால் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com