

கம்பாலா,
உகாண்டாவின் கயம்புரா வர்த்தக மையம் அருகே, குயின் எலிசெபத் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த வர்த்தக மையத்தை ஒட்டிய சாலையில் எரிபொருள் ஏற்றி வந்த டிரக் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களில் மோதியது.
மோதிய வேகத்தில், டிரக் பயங்கரமாக வெடித்தது. இந்த பயங்கர விபத்தில், 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சாலையோரம் இருந்த 25 சிறிய கடைகளும் தீயில் கருகின. படுகாயம் அடைந்த 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.