பென்சில்வேனியாவில் சாக்லெட் ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் பலி

பென்சில்வேனியா சாக்லேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மாயமாகி உள்ளனர்.
பென்சில்வேனியாவில் சாக்லெட் ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் பலி
Published on

ஹர்ரிஸ்பெர்க்,

பென்சில்வேனியாவில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தற்போது இடிபாடுகளுக்குள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் ரெடிங் பகுதியில் நிகழ்ந்தது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு ஆர்எம் பால்மர் சாக்லெட் ஆலையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது. அதில் ஆலையின் ஒரு கட்டிடம் அழிந்துபோனது, மற்றொன்று சேதமடைந்தது.

அருகில் இருக்கும் சில வீடுகள் வெடிவிபத்தால் அதிர்ந்தன. இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறைத் தலைவர் வெய்ன் ஹோல்பென் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com