ஜெர்மனி: சிறிய ரக விமானம் வீட்டின் மீது மோதி விபத்து - 2 பேர் பலி

இந்த விமான விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெர்மனி: சிறிய ரக விமானம் வீட்டின் மீது மோதி விபத்து - 2 பேர் பலி
Published on

பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் எர்புருட் நகர் அருகே அல்கர்செல்பென் பகுதியில் இருந்து முசென்கல்பச்ட் விமான நிலையத்திற்கு நேற்று காலை சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தை 71 வயதான மூதாட்டி ஓட்டிச்சென்றார்.

நெதர்லாந்து எல்லை அருகே கொர்சன்பரிச் பகுதியில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானம் தீப்பற்றி எரிந்தது.

இந்த சம்பவத்தில் விமானியான மூதாட்டி மற்றும் விபத்துக்குள்ளான வீட்டில் இருந்த நபர் என மொத்தம் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com