ஜப்பானில் 2 படகுகள் கவிழ்ந்ததில் 2 பேர் பலி

உயிரிழந்தவர்கள் 17 வயது மாணவி மற்றும் புகுத்சு படகு ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டோக்கியோ

ஜப்பானின் தெற்கு தீவான ஒகினவா பகுதியில் ஹெனோகோ என்ற இடத்தில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளது. இதனருகே 2 படகுகள் சென்று கொண்டிருந்தன. அந்த படகுகளில் பயணித்த 18 பேர் கியோட்டோ பள்ளி மாணவர்கள் ஆவர்.

10 பேர் ஹெய்வா மரு படகு மற்றும் 8 பேர் சிறிய ரக புகுத்சு படகில் பயணித்தனர். அப்போது அந்த படகுகள் இரண்டும் திடீரென கவிழ்ந்தன. இந்த விபத்தில் 2 படகுகளில் இருந்த 21 பேரும் தூக்கி வீசப்பட்டு, நீருக்குள் விழுந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Also Read
ரஜினிகாந்த் குறித்த த.வெ.க தலைமை நிர்வாகியின் பேச்சுக்கு கண்டனம்; எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு

கோப்புப்படம்

எனினும், இதில் ஒரு மாணவி மற்றும் படகு ஓட்டுநர் என 2 பேர் பலியாகி விட்டனர். மற்றவர்கள் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் 17 வயது மாணவி மற்றும் புகுத்சு படகு ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இதுதவிர 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி ஜப்பான் கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com