

ரோம்,
இத்தாலியின் பெர்காமோ மாகாணத்தை சேர்ந்தவர்கள் ரகிந்தர்சிங் (வயது 48) மற்றும் குர்மித்சிங்(48). இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்களான அவர்கள் வேலை நிமித்தமாக அங்கு சென்று குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
கோவோ நகரில் உள்ள குருத்வாராவில் வைசாகி விழாக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. விழாக் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு குருத்வாராவில் இருந்து வெளியே வந்தபோது அவர்கள் மீது 'காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி யோடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரிக்க வலியுறுத்தி இந்திய தூதரகம் இத்தாலி அரசாங்கத்துக்கு அழுத்தம் அளித்துள்ளது.