2 இத்தாலி போர் விமானங்கள் நடுவானில் மோதல்: விமானிகள் இருவரும் பலி

இத்தாலி போர் விமானங்கள் இரண்டு நடுவானில் மோதிய விபத்தில் சிக்கி, விமானிகள் இருவரும் பலியாகினர்.
2 இத்தாலி போர் விமானங்கள் நடுவானில் மோதல்: விமானிகள் இருவரும் பலி
Published on

ரோம்,

இத்தாலி நாட்டின் கைடோனியா ராணுவ விமான தளத்தின் அருகே அந்நாட்டு விமானப்படையின் 2 இலகுரக போர்விமானங்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

அப்போது அந்த விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி தரையில் விழுந்தன.

ஒரு விமானம் குடியிருப்பு பகுதி ஒன்றில் ஒரு காரின் மீதும், மற்றொரு விமானம் வயல்வெளியிலும் விழுந்தன.

இந்த விபத்தில் இரு போர்விமானங்களின் விமானிகள் இருவரும் பலியாகிவிட்டனர். அதிர்ஷ்டவசமாக, தரையில் இருந்த யாரும் காயமடையவில்லை.

பலியான விமானிகளின் குடும்பத்தினருக்கும், சக போர்விமானிகளுக்கும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com