கொலம்பியாவில் பத்திரிகையாளர்கள் 2 பேர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

கொலம்பியாவில் திருவிழா நிகழ்ச்சியை படம் பிடித்து விட்டு திரும்பிய பத்திரிகையாளர்கள் 2 பேர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
கொலம்பியாவில் பத்திரிகையாளர்கள் 2 பேர் மர்ம நபர்களால் சுட்டு கொலை
Published on

பொகட்டா,

கொலம்பியா நாட்டின் கரீபியன் கடலோர பகுதியில் உள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் சொல் டிஜிட்டல் என்ற பெயரிலான வலைதள செய்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், லீனர் மோன்டிரோ ஆர்டிகா (வயது 37) மற்றும் திலியா கான்ட்ரிராஸ் கேன்டில்லோ (வயது 39) ஆகிய இருவர் செய்தியாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் திருவிழா ஒன்றை படம் பிடிக்க சென்றுள்ளனர். சான்டா ரோசா டி லிமா பகுதியில் நடந்த திருவிழாவில் செய்திகளை சேகரித்து கொண்டு திரும்பி கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி உள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 பேரும் உயிரிழந்து விட்டனர்.

திருவிழாவில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்திருக்கும் என போலீசார் கூறியுள்ளனர். எனினும், பத்திரிகையாளர்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தும்படி ப்ரீ பிரஸ் பவுண்டேசன் என்ற அமைப்பு சார்பில் போலீசாருக்கு வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

கொலம்பியாவில் கடந்த ஆண்டு வன்முறை, படுகொலை உள்ளிட்டவற்றால் பத்திரிகையாளர்கள் 768 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com