சீனாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி; 3 பேர் மாயம்

தெற்கு சீனாவில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பீஜிங்,

சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் ஜுஹாய் நகரில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில், 5 தொழிலாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், ஜின்ஹாய் என்ற அந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இதனால், பணியில் இருந்த தொழிலாளர்கள் கடலில் தவறி விழுந்துள்ளனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் தவிர 3 தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என தெரியவரவில்லை.

தொழிலாளர்கள் 2 பேரின் உடல்கள் இன்று மதியம் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. எனினும், காணாமல் போன 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது என ஜுஹாய் நகராட்சியின் அவசரகால மேலாண்மை வாரியம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com