சீனாவில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலியானார்கள்.
சீனாவில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி
Published on

பீஜிங்,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன்பின் சீனாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என கூறப்பட்டது. இந்நிலையில், சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலியானார்கள். அதற்கு முந்தைய நாள் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில், 108 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், எந்த அறிகுறியும் இல்லாமல், புதிதாக 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com