அமெரிக்காவில் பயங்கரம்: உணவு திருவிழாவில் துப்பாக்கி சூடு- 2 பேர் பலி, பலர் காயம்

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கி சூடு
Published on

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் சியாட்டில் நகரில் உணவுத்திருவிழா ஒன்று நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவின் போது மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 2 வயது குழந்தையும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 6 மணியளவில் சியாட்டில் சென்டர் வளாகத்தில் நடைபெற்றது. துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன், திருவிழாவில் இருந்த நூற்றுக்கணக்கானோர் அலறியடித்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

பதறி ஓடிய மக்கள்

சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகளில், துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் மக்கள் பதற்றத்துடன் சிதறி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் அடையாளம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் சம்பவம் நடந்த பகுதியைத் தவிர்க்குமாறும் சியாட்டில் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com