2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடை; பிரதமர் மோடிக்கு கவுதமாலா அதிபர் நன்றி

2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விற்பதற்கு பதிலாக நன்கொடையாக வழங்கியதற்காக கவுதமாலா அதிபர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
நன்றி: இந்திய தூதரகம்
நன்றி: இந்திய தூதரகம்
Published on

கவுதமாலா சிட்டி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரியில் நாடு முழுவதும் இந்த பணியானது தொடங்கி நடந்து வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி இன்று காலை வரையில், 1,42,42,547 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

இந்தியாவில் உற்பத்தியான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் இலங்கை, மாலத்தீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று கவுதமாலா நாட்டுக்கும் இந்தியா சார்பில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அந்நாட்டின் தேவைக்காக 2 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

இதனை பெற்று கொண்ட பின்னர் கவுதமாலா அதிபர் அலிஜாண்டிரோ கியாம்மடெய் கூறும்பொழுது, கொரோனா தடுப்பு மருந்துகளை வினியோகித்து உதவி புரிந்ததற்காக இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தியா தடுப்பு மருந்துகளை எங்களுக்கு விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றை நன்கொடையாக வழங்கி உள்ளது. முன்கள சுகாதார பணியாளர்கள் நோயெதிர்ப்பு சக்தி பெறுவதற்கு அவை உதவும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com