

துபாய்,
ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குத லில் கடந்த 28-ந்தேதி கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது.
ஈரைான நேரடியாக தாக்கி வரும் அமெரிக்காவும். இஸ்ரேலும் அந்த நாட்டு கடற்படை கப்பல்களையும் தாக்கி அழித்து வருகின்றன. இந்த நிலையில் ஈரான் குண்டு வீச்சில் கப்பல் தீப்பற்றியதில் காணமல்போன இந்தியர்கள் 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரினை அருகே ஸ்கைலட் கப்பல் மீது மார்ச் 1-ம் தேதி குண்டு வீசியது. ஈரான். கப்பல் தீப்பற்றி எரிந்ததில் ஒரு இந்தியர் இறந்தநிலையில் கேப்டன் அஷிஷ் குமார் உள்பட இருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இருவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.