ஜெய்ஷ் இ முகமது தலைமையகத்தை நிர்வகிக்க 2 அதிகாரிகள் நியமனம்

ஜெய்ஷ் இ முகமது தலைமையகத்தை நிர்வகிக்க, 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்ஷ் இ முகமது தலைமையகத்தை நிர்வகிக்க 2 அதிகாரிகள் நியமனம்
Published on

லாகூர்,

புலவாமா தாக்குதலை தொடர்ந்து, உலக நாடுகளின் நிர்ப்பந்தத்தால், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பகவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைமையகத்தை கடந்த 22-ந் தேதி பஞ்சாப் மாகாண அரசு கைப்பற்றியது.

அந்த தலைமையகத்தில் ஒரு கல்லூரியும், மசூதியும் உள்ளன. அதில், கல்லூரியின் நிர்வாக பணிகளை மேற்பார்வையிட குலாம் அப்பாஸ் என்ற அதிகாரியையும், மசூதியின் நிர்வாக பணிகளை மேற்பார்வையிட முகமது அலி என்ற அதிகாரியையும் பஞ்சாப் மாகாண அரசு நேற்று நியமித்தது.

முன்னதாக, அந்த இடம் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைமையகம் அல்ல என்று பாகிஸ்தான் மந்திரி பவத் சவுத்ரி மறுத்த நிலையில், இவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com