புளோரிடா தேவாலயத்தில் 2 பேர் சுட்டுக் கொலை

புளோரிடா தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நிகழ்வில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புளோரிடா தேவாலயத்தில் 2 பேர் சுட்டுக் கொலை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள ரிவியெரா கடற்கரையில் விக்டரி சிட்டி தேவாலயம் அமைந்துள்ளது. அங்கு நேற்று பிற்பகல் 2:34 மணியளவில் இறுதிச் சடங்கு நிகழ்வு நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் ஒரு ஆண் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவர் பலியானதாக ரிவியெரா காவல்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 13 சுற்றுகள் சுடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com