அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்

அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல் கண்டுடெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்
Published on

சிகாகோ,

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். டாக்டரான இவர் கருக்கலைப்பு மருத்துவ மனையை நடத்தி வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு இவர் 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததை அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியதால், அவரது மருத்துவ மனைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, மருத்துவமனை மூடப்பட்டது.

இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3-ந்தேதி உல்ரிச் கிளோபர் உயிர் இழந்தார். அதனை தொடர்ந்து, டாக்டரின் குடும்பத்தார் அவரது சொத்துகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவருக்கு சொந்தமான ஒரு வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம், அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com