அமெரிக்கா: விமான கண்காட்சியின்போது நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா: விமான கண்காட்சியின்போது நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் இடாஹோ மாகாணம் எல்மொர் நகரில் மவுண்டன் ஹோம் பகுதியில் அந்நாட்டின் விமானப்படை தளம் உள்ளது.

இந்த விமானப்படை தளத்தில் நேற்று போர் விமான கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியின் அமெரிக்க போர் விமானங்கள் காட்சிபடுத்தப்பட்டன. மேலும், போர் விமானங்களில் சாகசங்களும் நடைபெற்றன.

அப்போது, இஏ-18ஜி குரோலர் ரக 2 போர் விமானங்கள் நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டபோது 2 போர் விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி தரையில் விழுந்து வெடித்து சிதறின.

இந்த சம்பவத்தில் போர் விமானங்களில் இருந்த 4 விமானிகளும் பாரசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com