மவுரீசியஸ் நாட்டில் மீண்டும் 2 வாரம் ஊரடங்கு அமல்

தொற்று தொற்று அதிகரித்ததன் காரணமாக மவுரீசியஸ் நாட்டில் மீண்டும் 2 வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மவுரீசியஸ் நாட்டில் மீண்டும் 2 வாரம் ஊரடங்கு அமல்
Published on

போர்ட் லூயிஸ்,

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்தாலும், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் இன்னும் தொற்று எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் தீவு நாடான மவுரீசியஸில், தற்போது கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் இன்று வரை அங்கு புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்பாட்டுகுள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதால், மவுரீசியஸ் நாட்டில் தொடர்ந்து 2 வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் பிரவீந்த்குமார் ஜுக்னாத் அறிவித்துள்ளார்.

துறைமுகம், விமான நிலையம், மருத்துவமனை சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன் செயல்படும் என்றும் பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் அகரவரிசை சுழற்சி அடிப்படையில் இயக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com