நெதர்லாந்தில் சரக்கு கப்பலில் தீ விபத்து: காயமடைந்த 20 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பினர்

'பிரீமென்ட்டில் ஹைவே' சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. இதில் மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.
நெதர்லாந்தில் சரக்கு கப்பலில் தீ விபத்து: காயமடைந்த 20 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பினர்
Published on

தி ஹேக்,

ஜெர்மனியில் இருந்து 'பிரீமென்ட்டில் ஹைவே' என்ற சரக்கு கப்பல் 3,800-க்கும் அதிகமான கார்களுடன் இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் முழுவதும் இந்திய மாலுமிகளால் இயக்கப்பட்டது. அந்த கப்பலில் 21 இந்திய மாலுமிகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி நெதர்லாந்து நாட்டில் உள்ள அமிலாந்து தீவுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது 'பிரீமென்ட்டில் ஹைவே' சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. இதில் மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.

20 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை நெதர்லாந்து கடலோர காவல்படை மீட்டது. இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட சரக்கு கப்பலில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட 20 இந்தியர்களும் பத்திரமாக நாடு திரும்பியதாக நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதேபோல் தீ விபத்தில் உயிரிழந்த இந்திய மாலுமியின் உடலை இந்தியாவுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருவதாகவும் தூதரகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com