

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் மாஸ்டாக் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து உள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்களில் 20 பேர் உயிரிழந்து உள்ளனர், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு மீடியாக்களில் செய்தி வெளியாகி உள்ளன். பாகிஸ்தான் செனட் சபையின் துணை சபாநாயகர் மவுலானா அப்துல் கபூர் கைதேரி குண்டு வெடிப்பில் காயம் அடைந்து உள்ளார், அவரை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளது.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்நாட்டு மீடியாவிற்கு பேட்டியளித்து பேசிஉள்ள கைதேரி, தனக்கு சிறிய அளவிலான காயமே ஏற்பட்டு உள்ளது என கூறிஉள்ளார். குண்டுவெடிப்பில் கைதேரியின் கார் கடும் சேதம் அடைந்து உள்ளது. அவருடைய கார் டிரைவர் உயிரிழந்துவிட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தஒரு இயக்கமும் பெறுப்பு ஏற்கவில்லை. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.