

ஜெனீவா,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், அந்த நாட்டையே புரட்டி போட்டு விட்டது. அந்த நாட்டின் குடிமக்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறுகிற, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரைனை விட்டு இதுவரை 20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இது இரண்டாவது உலகப்போருக்கு பின் ஐரோப்பா கண்ட மிக விரைவான வெளியேற்றம் என்று ஐ.நா.சபை அகதிகள் ஆணையத்தின் கமிஷனர் பிலிப்போ கிராண்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.