கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிப்பு - ஐ.நா. அறிக்கை

கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிப்பு - ஐ.நா. அறிக்கை
Published on

பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்தவகையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் தொடர்ச்சியான வெள்ளம், நிலச்சரிவுகளை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா.வின் மனிதாபிமான நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி கடந்த ஓராண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளில் தொடர்மழை, வெள்ளப்பெருக்கு ஆகிய காரணங்களால் சுமார் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் குறைபாடு நிலவுகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்த ஆண்டுக்கான மழைக்காலம் வருகிற செப்டம்பர் மாதம் வரை தீவிரமடையும் என்பதால் இடம்பெயர்தல் மேலும் அதிகரிக்கலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com