பிரிட்டனில் மணிக்கு 360 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்: பிரான்ஸ், ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலை தயாரிக்க பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நிறுவனங்களுடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

பிரிட்டன் நகரில் புல்லட் ரயில்களை இயக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 360 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நிறுவனங்களுடன் 54 மின்சார ரயில்களை தயாரிக்க பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது

லண்டனிலிருந்து கிளாஸ்கோ, லிவர்பூல், மான்செஸ்டர் ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த அதிவேக ரயில்களை இயக்க ரயில்வே போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

லண்டன் மற்றும் மிட்லாண்ட்ஸ் இடையே கட்டப்பட்டு வரும் புதிய பாதையின் முதல் பகுதியில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். பிரிட்டனின் வடக்கு நகரங்களான கிளாஸ்கோ, லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் ஆகியவற்றில் தற்போதுள்ள ரயில்வேகளிலும் அவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுளது. பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்காமுடன் லண்டனை இணைக்கும் ஆரம்ப கட்டம் 2029-2033-க்குள் திறக்கப்பட உள்ளது.

இன்னும் சில ஆண்டுகளில் மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக மின்சார ரயில்கள் பிரிட்டன் நகரில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com