உக்ரைனில் இருந்து இதுவரை 25 லட்சம் அகதிகள் வெளியேற்றம்..!

ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரைனில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

ஜெனீவா,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், அந்த நாட்டையே புரட்டி போட்டு விட்டது. அந்த நாட்டின் குடிமக்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறுகிற, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிப்ரவரி 24ல் தொடங்கப்பட்ட ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரைனை விட்டு இதுவரை 25 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இது இரண்டாவது உலகப்போருக்கு பின் ஐரோப்பா கண்ட மிக விரைவான வெளியேற்றம் என்று ஐ.நா.சபை அகதிகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம், உக்ரைனில் இருந்து சுமார் 40 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறக்கூடும் என கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com