கொரோனாவின் 2வது அலை ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் - உலக சுகாதார அமைப்பு தகவல்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2வது அலை மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவின் 2வது அலை ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் - உலக சுகாதார அமைப்பு தகவல்
Published on

ஜெனீவா,

ஐரோப்பா கண்டத்தில் சமீபத்திய வாரங்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அது இன்னும் வேகம் எடுத்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் உலகம் முழுவதும் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களில் பாதிபேர் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல முந்தைய வாரத்தை விட இந்த வாரம் ஐரோப்பாவில் கொரோனா பலி, 46 சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, அமெரிக்காவிலும் சாவு எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், அது வெறும் 2 சதவீதம் அளவுக்கே உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தது.

ஐரோப்பாவை பொறுத்தவரை பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிக பரவல் காணப்படுகிறது. இதைப்போல செக் குடியரசு, பெல்ஜியத்திலும் வைரசின் தாக்கம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com