

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு 10.58 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக பாகிஸ்தானின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த நில நடுக்கத்தால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.