பெண்களை வேட்டையாடிய 3 சகோதரர்களுக்கு தலா 30 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் 3 சகோதரர்கள், கடந்த 14 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
3 சகோதரர்களுக்கு சிறை தண்டனை.
Published on: 

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மியாமி நகரங்களில், பெண்களை வேட்டையாடிய 3 சகோதரர்களுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெண்களை வேட்டையாடுதல்

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மியாமி நகரங்களில் பெரும் செல்வாக்குடன் வலம் வந்த ஓரன் அலெக்சாண்டர், ஆலன் அலெக்சாண்டர் என்ற இரட்டையர்கள் மற்றும் அவர்களின் மூத்த சகோதரர் டால் அலெக்சாண்டர் ஆகிய 3 பேரும் பெண்களை வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்.

14 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை

இவர்கள் தங்களது ஆடம்பர சொகுசு வாழ்க்கை மற்றும் பண பலத்தைப் பயன்படுத்தி, கடந்த 14 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பள்ளி மாணவிகளைக் கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளியானது.

3 சகோதரர்களுக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் கோர்ட்டு நீதிபதி, குற்றவாளிகளான இந்த 3 கோடீஸ்வர சகோதரர்களுக்கும் தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com