எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 3 பேர் பலி

மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்
பெர்லின்,
ஜெர்மனியின் பேடன்-வூர்ட்டம்பேர்க் மாகாணத்தின் சிங்மெரிஜென் நகரில் இருந்து உல்ம் நகருக்கு நேற்று மாலை 6 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது.
அந்த ரெயிலில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பிபிரிட்ச் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






