

ஹூஸ்டன்,
ஆண்டுதோறும் டைம் இதழ் மிகவும் செல்வாக்குள்ள இளைஞர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் மூன்று இந்திய மாணவ - மாணவிகள் இடம் பெற்று உள்ளனர்.
இந்திய அமெரிக்கர் காவ்யா கோப்பரப்பு, ரிஷப் ஜெயின் மற்றும் பிரிட்டிஷ் இந்தியர் அமிகா ஜார்ஜ் ஆகியோர் அந்த மாணவ - மாணவிகள் ஆவர். உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கான உத்வேகமான குழுவில் இவர்கள் இடம் பெற்று உள்ளனர்.
எட்டாம் வகுப்பு படிக்கும் ரிஷப் ஜெயின், ஓரிகோனில் வாழ்ந்து வருகிறார். கணைய புற்றுநோய்க்கு ஒரு குணமாக இருக்கும் ஒரு வழிமுறையை உருவாக்கி உள்ளார். 14 வயதாகும் இவர் இதற்காக ஒரு மென்பொருள் கருவியை உருவாக்கி உள்ளார்.
இது பாதிப்பின் போது நிகழ்வுகளை, டாக்டர்களுக்கு உதவும் வகையில் கணையத்தில் மிகவும் தெளிவாக தெரியும் படி காட்டக்கூடியது. இதனால் தேவையான சிகிச்சை அளிக்க முடியும் என டைம் இதழ் கூறி உள்ளது.
18 வயதான காவ்யா கோப்பரப்பு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் ஒரு ஆழமான கற்றல் கணினியை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் மூளை புற்றுநோய் நோயாளிகளிடமுள்ள திசுக்களின் ஸ்லைடுகளை ஸ்கேன் செய்ய முடியும். தனித்துவமான நிறம், அமைப்பு மற்றும் அணு அமைப்பு பற்றி ஸ்கேன் செய்ய வல்லது. மூளை புற்றுநோய் சிகிச்சை கடந்த 30 ஆண்டுகளில் இருந்து மேம்படுத்தப்படவில்லை.
டைம் இதழில் குறிப்பிட்டுள்ளபடி , காவ்யா கோப்பரப்பின் குறிக்கோள் "தனித்தன்மை வாய்ந்த சிகிச்சைகள் உருவாக்கப்படுவதாகும்."
19 வயதான அமிகா ஜார்ஜ், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் பொருட்கள் வழங்குவதன் மூலம் மாதவிடாய் கால சிரமங்களை முடிவுக்கு கொண்டு வர எம்.பி.க்களை அணுகுவதை நோக்கமாகக் கொண்டது.
டைம் இதழில் அவர் கூறி இருப்பதாவது:-
"அது உண்மையில் என்னை அதிர்ச்சியுற வைத்தது. இங்கிலாந்தில் பல பெண்கள் தங்கள் மாதவிடாய் காலக்கட்டத்தில் மாதவிடாய் பொருட்களை வாங்க முடியாமல், வழக்கமாக பள்ளிக்கூடத்தை இழந்திருக்கிறார்கள்'' என்று தெரிந்து கொண்டேன் என கூறி உள்ளார். இது அவர்களின் கண்காணிப்பில் நடக்கிறது என்பதை அரசாங்கம் அறிந்திருந்தது, ஆனால் அவர்கள் தீர்வு காண மறுத்து விட்டனர் என கூறினார்.
அமிகா ஜார்ஜ், #FreePeriods என்ற ஹேஸ்டேக் மூலம் மாதவிடாய் கால வறுமையை ஒழிக்க பிரச்சாரத்தை மேற்கொண்டார். கிட்டத்தட்ட 200,000 கையெழுத்துக்களை மனு மூலம் சேகரித்தார். இந்த இயக்கமானது இறுதியில் ஒரு டஜன் இங்கிலாந்து எம்.பி.க்களின் ஆதரவை பெற்றது. முதல் முறையாக இந்த பிரச்சினைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கத்தை ஊக்கப்படுத்தியது.