

பாங்காக்,
தாய்லாந்து நாட்டின் சாங்லா மாகாணம் ஹட் யய் மாவட்டத்தில் உள்ள படோங் கிராமத்தில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் இன்று மாணவ, மாணவியர் கல்வி பயின்று வந்தனர்.
இந்நிலையில் , இந்த பள்ளிக்குள் இன்று மாலை துப்பாக்கியுடன் 18 வயது இளைஞர் நுழைந்தார். அந்த இளைஞர் பள்ளியில் இருந்த மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளியில் சில ஆசிரியர்கள், மாணவ, மாணவியரை அந்த இளைஞர் பணய கைதிகளாக சிறைபிடித்து வைத்தார்.
துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்ற போலீசார், பணய கைதிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திய இளைஞரை சுட்டுப்பிடித்தனர்.