அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

துப்பாக்கி சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் கிரவுன் ஹைட்ஸ் நகரில் பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று அதிகாலை 3.30 (அந்நாட்டு நேரப்படி) 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர்.

இந்நிலையில், அந்த ஓட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com