வியட்னாமில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

வியட்னாமில் ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஹனோய்,

வியட்னாம் நாட்டின் தெற்கே பா ரியா-வுங் டவ் மாகாணத்தில் பூ மை என்ற நகரில் அமைந்த அதிக ஆழம் நிறைந்த ஏரி ஒன்றில் 5 பேர் குழுவாக படகு ஒன்றில் பயணம் செய்துள்ளனர்.

இதில், திடீரென படகு ஏரியில் கவிழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் நீந்தி கரை சேர்ந்து விட்டனர். ஆனால், மீதமிருந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.

அவர்கள் அனைவரும் 22 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களின் உடல்கள் நீண்ட தேடுதலுக்கு பின்பு நேற்றிரவு மீட்டனர்.

இதே பகுதியில், கடந்த மே 29ந்தேதி நடந்த படகு விபத்தில் 6 மற்றும் 9 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com